/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திடீர் உடல் நலக்குறைவு; பஸ்சை ஓரம் கட்டிய டிரைவர்
/
திடீர் உடல் நலக்குறைவு; பஸ்சை ஓரம் கட்டிய டிரைவர்
ADDED : மார் 28, 2024 11:21 PM

திருப்புவனம் : திருப்புவனம் வழியாக மதுரை சென்ற அரசு பஸ்சின் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி சிகிச்சை பெற்ற பின் கிளம்பி சென்றார்.
திருப்புவனம் வழியாக மதுரை, ராமேஸ்வரம், கமுதி உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோட்டத்திலும் 50 சதவிகித ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஓய்வு தரப்படாமல் தொடர்ச்சியாக பஸ்களை இயக்க நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக ஊழியர்கள் குமுறுகின்றனர்.
இது தவிர மதுரைக்கு வரும் பஸ்களை அப்படியே சிறப்பு பஸ்களாக தாயமங்கலம் சென்று வர கட்டாயப்படுத்துகின்றனர். நேற்று தாயமங்கலம் சென்று வந்த அரசு பஸ்சை டிரைவர் ஓட்டி வந்தார். உடல் நலமில்லாத நிலையில் பஸ்சை தொடர்ச்சியாக ஓட்ட முடியாமல் திருப்புவனம அரசு மருத்துவமனை அருகே பஸ்சை நிறுத்தி விட்டார். பின் கண்டக்டர் பயணிகள் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின் மதுரைக்கு பஸ்சை எடுத்து சென்றார்.
ஊழியர்கள் கூறுகையில்: அதிகாரிகள் பழுதான வாகனங்களை தொடர்ச்சியாக இயக்க வலியுறுத்துகின்றனர். அவசரத்திற்கு விடுமுறை எடுக்க முடிய வில்லை. எதிர்ப்பு தெரிவித்தால் நிர்வாக ரீதியாக நெருக்கடி தருகின்றனர். என்ன செய்வது என தெரியவில்லை என புலம்பினர்.

