/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே மர்ம காய்ச்சல் கை, கால் மூட்டு வலியுடன் தவிப்பு
/
சிவகங்கை அருகே மர்ம காய்ச்சல் கை, கால் மூட்டு வலியுடன் தவிப்பு
சிவகங்கை அருகே மர்ம காய்ச்சல் கை, கால் மூட்டு வலியுடன் தவிப்பு
சிவகங்கை அருகே மர்ம காய்ச்சல் கை, கால் மூட்டு வலியுடன் தவிப்பு
ADDED : ஆக 31, 2024 01:44 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், சாலுார் பகுதியில் மக்களுக்கு கடந்த சில நாட்களாக மூட்டு வலியுடன் காய்ச்சல் பரவி வருகிறது.
சிவகங்கை அருகே சாலுார் ஊராட்சியில் கீழ, மேல சாலுார், வேலனி வடக்கு, தெற்கு, பெருமாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 5000 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். காய்கறி, கரும்பு தோட்ட விவசாயத்தை நம்பியே உள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு கை, கால் மூட்டு வலி, வீக்கத்துடன் காய்ச்சல் பரவி வருகிறது.
இடையமேலுார், கீழப்பூங்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவி சிகிச்சை பெற்று, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒரு நபருக்கு வரும் காய்ச்சலால், அவருக்கு கை, கால் மூட்டு வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சலில் தவித்து வருகின்றனர்.
மர்ம காய்ச்சல் பரவல்
சாலுார் கருப்பாயி கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக கை,கால் மூட்டு வலி, கால்கள் வீக்கத்துடன் காய்ச்சலால் தவித்து வருகிறேன். எந்தவிதமான காய்ச்சல் என தெரியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம். விவசாய பணிகள் உட்பட எங்களது வருவாய்க்கான அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை உடனே தலையிட்டு காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும், என்றார்.