நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: மயிலாடுதுறை கண்ணாடியார் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் மதிமோகன் 38, பெற்றோர் இல்லை. தேவகோட்டை அருகே உடப்பன்பட்டியில் சிமென்ட் தடுப்பு சுவர், தொட்டி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார்.
மதிமோகன் தனியாகவும், பணியாளர்கள் தனியாகவும் வசித்தனர். நேற்று முன்தினம் உரிமையாளர் வராத நிலையில் பணியாளர்கள் சென்று பார்த்த போது மதிமோகன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்ததை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
முதுகு தண்டு வட வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.