ADDED : மே 29, 2024 04:57 AM
காரைக்குடி : கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு காவல்துறை, கல்லல் மாணவ மாணவியர் குழு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான கோடைகால போட்டிகள் நடைபெறுகிறது.
மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புகையிலையால் உடல் நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்த சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. ஜுன் 1 சுற்றுச்சூழல் மாசு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கோள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஓவியம், பேச்சு போட்டி நடைபெறுகிறது.
போட்டிக்கு தேவையான பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். தொடர்புக்கு பிரபு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர், 99440 89151 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.