ADDED : ஏப் 19, 2024 05:20 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் சேசு சபை நிர்வாகத்திலுள்ள பள்ளிகளை சேர்ந்த எட்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்பு நடந்தது.
இப்பள்ளிகளில் உள்ள இளமை கனல் எழுத்தாளர்இயக்கம், ஜேஸ்ஆர்ட் மாணவர் ஓவிய மன்றம்,என்.எம்.எம்.எஸ். அரசு கல்வி உதவி பெறுவதற்கான பயிற்சியினர் இணைந்து ஓவிய சிறப்பு முகாம் நடந்தது. நிறைவு விழா ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நடந்தது.
இளமை கனல் எழுத்தாளர் இயக்க ஆசிரியர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர்குழந்தைராஜ், பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா பங்கேற்றனர்.
