ADDED : ஜூன் 10, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடை கால பயிற்சி நிறைவு விழா நடந்தது.இதில் தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கோ- கோ, கால்பந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான நிறைவு விழாவிற்க கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார். சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரையில் நடந்த போட்டிகளில் சிறந்து விளங்கிய 250 மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு சான்று மற்றும் டி.சர்ட்களை வழங்கினார்.
நகராட்சி தலைவர் துரை ஆனந்த், சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனம் பரமசிவம் உட்பட பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.