ADDED : மே 06, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : அரியக்குடி புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி நேற்று முன்தினம் நடந்தது.
இந்த ஆலயத்தில் ஏப்., 7 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் மாலை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
வளன்நகர் பங்கு தந்தை அருள்ஆனந்த் தலைமை வகித்தார். அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சூசையப்பர் எழுந்தருளினார்.
பங்கு இறை மக்கள் ஊர்வலமாக செல்ல தேர்பவனி நடைபெற்றது. நேற்று காலை திருவிழா நிறைவு சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.