/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அரசு பள்ளியில் விவசாய பிரிவில் சேர்க்கை நிறுத்தம்
/
திருப்புவனம் அரசு பள்ளியில் விவசாய பிரிவில் சேர்க்கை நிறுத்தம்
திருப்புவனம் அரசு பள்ளியில் விவசாய பிரிவில் சேர்க்கை நிறுத்தம்
திருப்புவனம் அரசு பள்ளியில் விவசாய பிரிவில் சேர்க்கை நிறுத்தம்
ADDED : மே 31, 2024 06:18 AM
திருப்புவனம், : திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விவசாய பிரிவில் மாணவர்களை சேர்க்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வடகரையில் அமைந்துள்ளது 774 மாணவர்களும், 29 ஆசிரியர், ஆசிரியைகளும் பணியாற்றுகின்றனர். திருப்புவனம், வடகரை, பூவந்தி, ஏனாதி, அல்லிநகரம், கணக்கன்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.
11 மற்றும் 12ம் வகுப்பில் கணிதம், வரலாறு, பொருளியல், கணினி, விவசாய பிரிவு என ஐந்து பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இதில் தமிழ் வழி, ஆங்கில வழி என இரண்டும் உள்ளதால் குறிப்பிட்ட சில பிரிவுகளில் தனித்தனியே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் திருப்புவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டு விவசாய பிரிவில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இந்தாண்டு விவசாய பிரிவு கேட்ட மாணவர்களை வேறு பிரிவுகளில் சேர ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் பிரதான தொழிலே விவசாயம் தான் அதிலும் வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனத்தில் மழை இல்லாவிட்டாலும் பம்ப்செட் கிணறுகள் மூலம் விவசாயம் நடந்து வருகிறது.
விவசாயிகள் பலரும் தங்கள் குழந்தைகளை விவசாய பிரிவில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் திருப்புவனம் அரசு பள்ளியில் வேளாண் பிரிவு ஆசிரியர் இந்தாண்டுடன் ஓய்வுபெற உள்ளதால்சேர்க்க மறுப்பதால் தவித்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், தமிழகத்தில்மொத்தம் மூவாயிரத்து 54 மேல்நிலைப்பள்ளிகள்உள்ளன. இதில் தொழில்கல்வி என்ற பிரிவில் தையற்கலை, ஓவியக்கலை, விவசாயம், தட்டச்சு என பல்வேறு பிரிவுகளில் பாடங்கள் கற்று தரப்படுகின்றன. மற்ற பிரிவுகளுக்கு முதுகலை பட்டம்பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தொழிற்கல்வி படித்தவர்கள் மட்டுமே அந்த பிரிவிற்கு பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு, ஓய்வு பெறும் போது வேறு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் அந்த பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வேறு பிரிவுகளில் சேர்க்க பரிந்துரை செய்யப்படுகிறது.
திருப்புவனம் பெண்கள்பள்ளியில் கூட கடந்தஆண்டு தொழிற்கல்வி ஆசிரியர் ஓய்வுபெற்றதால்அந்த பிரிவில் சேர்க்கையை நிறுத்திவிட்டனர். சத்தமின்றி தமிழகம் முழுவதும் இது போன்று நடந்து வருகிறது. யாரும் கண்டு கொள்வதில்லை, என்றனர்.
உயர்கல்வி பயில வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு தொழிற்கல்வி மிகப்பெரிய வரப்பிரசாதம்,ஆனால் அதிகாரிகள் அந்த பிரிவையே தமிழகம் முழுவதும் மூடி வருவதை மாணவ, மாணவியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.