நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கல்லல் அருகே கே.சொக்கநாதபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் புகழேந்தி தலைமை வகித்தார்.
தமிழ் இனிமை என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் சரஸ்வதி நாகப்பன் பேசினார். ஆசிரியர் சிந்தாமணி வரவேற்றார்.
கவிஞர் ஆர்.கணேசன் தொகுத்து வழங்கினார். மாணவர்களுக்கு கவிதை வாசித்தல், பாடல், பேச்சு போட்டி நடத்தி பரிசு வழங்கினர். ஆசிரியை செல்வமீனாட்சி நன்றி கூறினார்.