/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சைபர் கிரைம் வழக்கில் கண்டுபிடிப்பு தமிழகம் முதலிடம்: ஐ.ஜி., கண்ணன்
/
சைபர் கிரைம் வழக்கில் கண்டுபிடிப்பு தமிழகம் முதலிடம்: ஐ.ஜி., கண்ணன்
சைபர் கிரைம் வழக்கில் கண்டுபிடிப்பு தமிழகம் முதலிடம்: ஐ.ஜி., கண்ணன்
சைபர் கிரைம் வழக்கில் கண்டுபிடிப்பு தமிழகம் முதலிடம்: ஐ.ஜி., கண்ணன்
ADDED : ஜூன் 23, 2024 03:57 AM
தேவகோட்டை: சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிப்பதில்தமிழகம் முதலிடம் வகிப்பதாக தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார்.
அவர் கூறியதாவது:
குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட எஸ்.பி.க்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து அதிகரிப்பு, எங்கு பார்த்தாலும் கண்ணில் படுமாறு போலீஸ், உடனடி ரியாக்க்ஷன் வசதியாக கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் போலீஸ் நியமித்து உள்ளோம்.
மக்கள் ஏதாவது கிளிக் செய்வதால் சைபர் கிரைம் ஏற்படுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஊருக்கு செல்லும் போது மதிப்புமிக்க பொருட்களை வீட்டில் வைத்து செல்வது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். குற்றங்கள் அதிகமாக நடக்கும் பகுதியில் விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
பழைய குற்றவாளிகள்,ரவுடிகள், திருடர்கள் பட்டியலை தயார் செய்து கண்காணித்து நடவடிக்கை எடுத்ததால் சமீபத்தில் அதிக வழக்குகளில் தண்டனை வாங்கி கொடுத்து உள்ளோம். இதனால் குற்றங்கள் தடுக்க உதவியாக உள்ளது.
சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்திற்குஒரு சைபர் கிரைம் ஸ்டேஷன் உள்ளது. மேலும் எஸ்.பி.யுடன் இது தொடர்பாக சைபர் கிரைம் டிடெக்டிவ் பிரிவு செயல்படுகிறது.
நமது பகுதியில் அதிகம் படித்தவர்கள் இருப்பதால் உடன் புகார் செய்வதும் போலீசார் வழக்கு பதிவு இருப்பதால் அதிகமாக தெரிகிறது. வரும் காலங்களில் குற்றங்கள் குறையும் என்றார்.