/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை விவசாயிக்கு வழங்க 45,000 பனை விதை இலக்கு
/
சிவகங்கை விவசாயிக்கு வழங்க 45,000 பனை விதை இலக்கு
ADDED : ஜூன் 27, 2024 05:33 AM
சிவகங்கை : சிவகங்கையில் பனை மரங்களை அதிகரிக்க செய்யும் நோக்கில், பனை மேம்பாட்டு இயக்கத்தில் 45,000 பனை விதைகள்வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் வரப்புகளில் பனை மரங்களை வளர்க்க ஏதுவாக, இலவசமாக பனை விதை வழங்க இந்த ஆண்டிற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தோட்டக்கலைத்துறை மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 50 பனை விதைகள் வீதம், இந்த ஆண்டிற்கு 45,000 பனை விதைகள் வழங்க திட்டமிட்டுள்ளனர். விவசாயிக்கு தலா 5 வீதம் 277 பனை கன்றுகளும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவிக்கும் விதத்தில், 100, 75 சதவீத மானியத்தில், மாவட்ட அளவில் சொட்டு நீர் பாசன வசதிகளை 1,000 எக்டேரில் ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதற்காகசிவகங்கை மாவட்டத்திற்கு அரசு ரூ.4 கோடி ஒதுக்கியுள்ளது.
5 ஏக்கருக்குள் புன்செய் நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தர தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.