/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
/
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
ADDED : ஜூலை 24, 2024 06:15 AM
சிவகங்கை: புலியடிதம்பம் டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் மீது விஷச்சாராயம் விற்றதாக போட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால், டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை ரத்து செய்தனர்.
காளையார்கோவில் அருகே புலியடித்தம்பம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஜெயக்குமார், விற்பனையாளர்கள் நாராயணன், சரவணன். இவர்கள் மூவர் மீதும் காளையார்கோவில் போலீசார் விஷச்சாராயம் விற்றதாக வழக்கு பதிவு செய்தனர். இதை கண்டித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க ஊழியர் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். டாஸ்மாக் மேலாளர் சிவக்குமார், டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. அதில், மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவிப்பது. அவர்களை புலியடிதம்பம் கடையிலேயே தொடர்ந்து பணி செய்ய அனுமதிப்பது என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு டாஸ்மாக் மேலாளர் , போலீசார் ஒப்புதல் அளித்ததால், காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பேச்சு வார்த்தையில் சி.ஐ.டி.யு., மாநில துணை செயலாளர் முருகன், தலைவர் திருமாறன், செயலாளர் குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை தலைவர் சேவியர், வி.சி.க., சங்க தலைவர் மலைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ.,மாவட்ட செயலாளர் சேதுராமன், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி தாளமுத்து பங்கேற்றனர்.