ADDED : செப் 07, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரி சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தயானந்தன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சுரேஷ் கண்ணா, மாவட்ட துணைத் தலைவர் குருபாலன் முன்னிலை வகித்தனர்.
மண்டல மகளிர் அணி செயலாளர் பியூலா கிறிஸ்டி தங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் பேசினார். மாவட்ட பொருளாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.