/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாநில போட்டியில் 39 அணிகள் பங்கேற்பு
/
மாநில போட்டியில் 39 அணிகள் பங்கேற்பு
ADDED : நவ 10, 2024 06:07 AM
சிவகங்கை : சிவகங்கையில் நடைபெறும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டலங்களுக்கிடையேயான 21வது மாநில கால்பந்து மற்றும் வளைப்பந்து போட்டியில் 39 அணிகள் பங்கேற்றன.
சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு அரங்கம், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் கால்பந்து, வளைபந்து போட்டி நடைபெறுகிறது.
போட்டிகளில் 39 மண்டலங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திலிருந்து 600 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோப்பை, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, சென்னை வடக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விமலாராணி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் ராஜேந்திரபிரசாத், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மத்திய விளையாட்டுக்குழு சார்பில் மேலாளர் கவுரிமணவாளன், முதுநிலை மேலாளர் தரக்கட்டுப்பாடு செந்தில், மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அருண் பிரசாத், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் கலந்து கொண்டனர்.