/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை சோகத்தில் காதலியும் தற்கொலை
/
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை சோகத்தில் காதலியும் தற்கொலை
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை சோகத்தில் காதலியும் தற்கொலை
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை சோகத்தில் காதலியும் தற்கொலை
ADDED : மே 29, 2024 02:07 AM

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடன் தொல்லையால் காதலன் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் முத்துக்குமார் 27. பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பைனான்ஸ் வேலையில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் காரைக்குடி கீழத்தெருவில் உள்ள உறவினர் செல்வி வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். செல்வியின் மகள் சுபஸ்ரீ புதுக்கோட்டை நர்சிங் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்தார். முத்துக்குமாரும் சுபஸ்ரீயும் காதலித்து வந்தனர். கடன் தொல்லையால் முத்துக்குமார் நேற்று முன்தினம் காரைக்குடி உறவினரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்துக்குமார் இறந்த செய்தி கேட்ட சுபஸ்ரீ தங்கியிருந்த கல்லூரி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்துக்குமாரின் தந்தை இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.