/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி
/
தி.வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி
ADDED : மே 03, 2024 05:43 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் மூல பால கால பைரவர் எழுந்தருளியுள்ளார்.
இவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று இரவு சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மூலவர் பைரவர் தங்க கவசத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா கணபதி பூஜை, தீபாராதனை, மகா பைரவயாகம் நடந்தது. பின்னர் கோ பூஜையும், தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புஷ்பயாகத்தை தொடர்ந்து மகாபூர்ணாகுதி நடந்தது.
யாகத்திலிருந்த புனித நீர் கலசங்களுக்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம் மற்றும் கற்பூர தீபம் உள்ளிட்ட அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.