
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் கும்பாபிேஷக முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு வருடாபிேஷகம் நடந்தது.
மூலவர் சன்னதி முன்பாக காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்த புனித கலசநீரால் மூலவருக்கும்,உற்ஸவருக்கும் அபிேஷக, ஆராதனை நடைபெற்றது.
இரவு 6:30 மணிக்கு 108 சங்காபிேஷகம் நடந்தது. அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம்,பக்தர்கள், மணிகண்டன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்கின்றனர்.