ADDED : ஜூலை 13, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகே முத்துநாட்டைச் சேர்ந்த நாகமங்களம், காச்சாக்குடி கிராமத்தில் வரசக்தி விநாயகர் கோவில், வெள்ளிப் பெரிய அய்யனார் கோவில் உள்ளது.
இக்கோவில்களில் திருப்பணி நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மோகன் சிவாச்சாரியார், சுந்தர்ராஜன் தலைமையில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வரசக்தி விநாயகர், வெள்ளிப் பெரிய அய்யனார், ஆதிகருப்பர், கருப்பர், காளியம்மன், பட்டாணி உட்பட பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.