/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்கரை சர்வீஸ் ரோடு பணி துவக்கம்
/
தென்கரை சர்வீஸ் ரோடு பணி துவக்கம்
ADDED : செப் 15, 2024 12:04 AM

நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே நான்கு வழிச்சாலையில் நாச்சியாபுரம் ரோட்டில் மேம்பாலத்துடன் சர்வீஸ் ரோடுகளை இணைக்கும் பணி துவங்கியுள்ளன.
காரைக்குடி - -மேலுார் நான்கு வழிச்சாலையில் ரோடு அமைக்கும் பணி முடிந்து தற்போது மேம்பால வேலைகள் நடைபெறுகிறது.
திருப்புத்துார் அருகே சிவகங்கை ரோட்டிலும், கண்டரமாணிக்கம் ரோட்டிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் ரோடுகள் நான்கு வழிச்சாலைக்கு கீழே செல்கின்றன.
ஆனால் திருப்புத்துார் -நாச்சியாபுரம் ரோட்டில் தென்கரை அருகே நான்கு வழிச்சாலை கீழாகவும், நாச்சியாபுரம் ரோடு மேம்பாலம் வழியாகவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மேம்பாலத்திலிருந்து இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க மண்ணை போட்டு உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
அதே போல் பாலத்தின் கீழ் நான்கு வழிச்சாலை செல்லும் பணியும் துவங்கியுள்ளது. ஆனால் நாச்சியாபுரம் ரோட்டிற்கான மேம்பாலம் குறுகியதாக உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இருவழிச்சாலை அளவிற்கான பாலம் அமைக்கவும், சைக்கிள்,பாதசாரிகள் கடக்க கீழே தேவையான வசதி செய்யவும் கோரியுள்ளனர்.