ADDED : ஜூன் 10, 2026 06:40 PM
சிவகங்கை, ஜூன் 11–
ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு பயிற்சி 4 மாதங்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35 க்குள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
நான்கு மாதங்கள் இப்பயிற்சி கோயம்புத்துாரில் நடைபெற உள்ளது. விடுதியில் தங்கி படிப்பதற்குரிய செலவு தொகை தாட்கோ வில் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று வழங்கப்படும். இப்பயிற்சியின் மூலம் மாத சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இப்பயிற்சி பெற www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
