/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா
/
பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா
ADDED : ஆக 03, 2024 04:53 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு பூசும் விழா நடந்தது.
இக்கோயிலில் ஆடி மூன்றாம் வெள்ளியில் பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைத்துப் பூசும் விழா 3வது ஆண்டாக நடக்கிறது. நேற்று காலை 8:00 மணிக்கு கோயில் வளாகத்தில் நுாற்றுக்கும் அதிகமான பெண்கள் அம்மியில் மஞ்சள் அரைக்க துவங்கினர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு உற்ஸவ அம்மனுக்கு பால். தயிர், குங்குமம், மஞ்சள் அபிஷேகம் நடந்தது.
பின்னர் அம்மியில் அரைத்த மஞ்சள் அம்மனுக்கு சாத்தப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
தொடர்ந்து அலங்காரத் தீபாராதனை நடந்தது. அம்மன் மீது பூசப்பட்ட மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றியும், மஞ்சள் அரைத்தும் அம்மனை பிரார்த்தித்தனர். ஏற்பாட்டினை வசந்த பெருவிழா குழுவினர் செய்தனர்.