ADDED : ஆக 17, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகேயுள்ள துடுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம். 46., இவருக்கும் தேவகோட்டை ஒத்தக்கடை பவுசியா 42. என்ற பெண்ணுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியே வசித்து வருகின்றனர். மனைவி மகன்களுடன் தனது பெற்றோருடன் வசிக்கிறார்.
கணவர் அப்துல்சலாம் சருகணி ரோட்டில் ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை கடை உரிமையாளர் கடையை திறக்க வந்த போது அப்துல் சலாம் துாக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
உரிமையாளர் மனைவி குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். மனைவி பவுசியா தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

