/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மினி ஸ்டேடியம் கட்டும் பணி சுணக்கம்
/
மினி ஸ்டேடியம் கட்டும் பணி சுணக்கம்
ADDED : ஆக 17, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அருகே சங்கராபுரத்தில் விளையாட்டு துறை சார்பில் மினி ஸ்டேடியம் கட்டும் பணியில் சுணக்கம் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
சட்டசபையில் எம்.எல்.ஏ., வைத்த கோரிக்கையால் காரைக்குடியில் மினி ஸ்டேடியம் கட்டப்படும் என அறிவித்தனர். சங்கராபுரம் ஊராட்சி என்.ஜி.ஓ., காலனியில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் கட்டும் பணி தொடங்கியது. கட்டுமான பணி துவங்கி, ஓராண்டிற்கு மேல் ஆகியும், ஸ்டேடியம் கட்டும் பணி முடிவுக்கு வராமல் இழுபறி நிலை நீடிக்கிறது.விளையாட்டு வீரர்கள் உரிய பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

