/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெண் தலையில் கல்லை போட்டு கொன்றவர் கைது
/
பெண் தலையில் கல்லை போட்டு கொன்றவர் கைது
ADDED : ஜூன் 11, 2024 07:52 PM

காரைக்குடி:பள்ளத்துாரில் பெண்ணின் தலையில் கல்லை போட்டுக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்துார் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் தலையில் காயத்துடன் பெண் ஒருவர் ஜூன் 9ம் தேதி இறந்து கிடந்தார். போலீசார் அப்பெண்ணின் உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரித்தனர்.
விசாரணையில், இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பொக்காட்டான் கரையை சேர்ந்தவர் ராஜா மனைவி அமுதா, 41, என்பது தெரிய வந்தது.
கணவர் இறந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன், 37 என்பவருடன் சேர்ந்து, பள்ளத்துாரில் அமுதா பாட்டில்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
மோகனுக்கும் அமுதாவிற்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன் தலையில் கல்லை போட்டு அமுதாவை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் மோகனை கைது செய்தனர்.