/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அகழாய்வு புறக்கணிப்பு வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
/
கீழடி அகழாய்வு புறக்கணிப்பு வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
கீழடி அகழாய்வு புறக்கணிப்பு வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
கீழடி அகழாய்வு புறக்கணிப்பு வரலாற்று ஆய்வாளர்கள் வேதனை
ADDED : மே 30, 2024 03:28 AM
கீழடி: இந்தாண்டு கீழடியில் அகழாய்வு புறக்கணிக்கப்பட்டு வெம்பக்கோட்டையில் அகழாய்வு தொடங்கப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ல் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வு பணியில் ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. மத்திய அரசு மூன்று கட்ட அகழாய்வை நடத்தி முடித்த பின் மத்திய அரசு அனுமதியுடன் தமிழக அரசு இதுவரை ஆறு கட்ட (மொத்தம் 9 கட்ட அகழாய்வு) அகழாய்வை நடத்தி முடித்துள்ளது.
கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்களில் தேர்வு செய்யப்பட்ட 13 ஆயிரத்து 834 பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
இந்தாண்டு கீழடியில் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை இதுவரை நடத்துவது குறித்து எந்த வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. அகழாய்வு நடத்தப்படுமா இல்லையா என்று கூட அறிவிக்கவில்லை. ஆனால் வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணிக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் கீழடி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி, பள்ளிச்சந்தை புதுார் உள்ளிட்ட இடங்களில் 110 ஏக்கரில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே உண்மையான நதிக்கரை நாகரீகம் பற்றி அறிய முடியும் என தெரிவித்திருந்தார்.
இதுவரை கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட இடங்களில் 20 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளன.
இந்தாண்டு கீழடியில் அகழாய்வு தொடங்காத பட்சத்தில் வரும் காலங்களில் நடைபெறவும் வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
கீழடியில் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை இதுவரை நடத்துவது குறித்து எந்த வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. அகழாய்வு நடத்தப்படுமா இல்லையா என்று கூட அறிவிக்கவில்லை.