ADDED : ஆக 02, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பின்புறம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்த ராஜா மகன் ஜனகரன் 24 சந்தேகம் படும் படியாக நின்றார். போலீசார் அவரை விசாரித்தனர். அவர் ஒன்றரை கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்து கைது செய்தனர்.