/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை வெப்பத்திலிருந்து கிராமத்தை காக்கும் ஆற்றங்கரை
/
கோடை வெப்பத்திலிருந்து கிராமத்தை காக்கும் ஆற்றங்கரை
கோடை வெப்பத்திலிருந்து கிராமத்தை காக்கும் ஆற்றங்கரை
கோடை வெப்பத்திலிருந்து கிராமத்தை காக்கும் ஆற்றங்கரை
ADDED : ஏப் 28, 2024 06:31 AM

கண்டவராயன்பட்டி :  திருப்புத்துார் அருகே மெய்யப்பட்டியில் கோடை வெப்பத்திலும் ஆற்றில் நீர் தேங்கி கிராமத்தினரை வெப்பத்திலிருந்து  பாதுகாக்கிறது.
கடுமையான கோடை வெப்பத்தால் கிராமங்களில் நீர்நிலைகளில் உள்ள நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வயல்கள், கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில் திருப்புத்துார் அருகே மெய்யப்பட்டி கிராமத்தில் மணிமுத்தாற்றில் தண்ணீர் தேங்கி குளிர்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க கிராமத்தினர் பலரும் இங்கு குளிக்கின்றனர். ஆடு, மாடுகளுக்கும் குடிநீராக பயன்படுகிறது.
கோடை மழை பெய்தால் மேலும் இங்கு நீர்வளம் பெருகி கோடையை சமாளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இக்கிராமத்தினர் உள்ளனர்.