நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை, எம்.கரிசல்குளம், மானாசாலை குட்வில் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளி ஆண்டு விழா, அறிவியல் கண்காட்சி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி துவக்க விழா நடைபெற்றது. தாளாளர் பூமிநாதன் தலைமை வகித்து அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
சிறந்த படைப்புகளை வைத்திருந்த மாணவர்களுக்கு தாளாளர் பூமிநாதன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை முதல்வர் லெட்சுமி மற்றும் ஆசிரியைகள், மாணவர்கள் செய்திருந்தனர்.