/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள்
/
பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள்
ADDED : மே 10, 2024 11:11 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கொன்றை மரங்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன.
மயில் கொன்றை எனப்படும் இவ்வகை மரங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை பூத்துக் குலுங்கும். மற்ற மாதங்களில் பூக்கள் மட்டுமின்றி காய்களும் காய்க்காத நிலையில் இலைகள் மட்டுமே காணப்படும். வெயில் காலம் துவங்கி விட்டால் மரங்களில் இலைகளை விட பூக்கள் தான் அதிகம் இருக்கும். இவற்றை அலங்கார கொன்றை, மயில் கொன்றை எனக் கூறுவது வழக்கம்.
துாரத்தில் இருந்து பார்த்தால் கண்களை கவரும் வகையில் இப்பூக்கள் சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்குவது தெரியும். சாலையோரங்களிலும், பள்ளி வளாகங்களிலும் இம்மரம் அதிகம் உள்ளது. கோடை காலங்களில் கண்ணுக்கு இதமாக மட்டுமல்லாமல் நிழல் தரும் வகையில் பூத்துக் குலுங்கும் இவ்வகை மரங்களை அதிகம் வளர்க்க நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.