ADDED : ஜூன் 02, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: மன்னார்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கார்த்தி 40. இவர் குடுகுடுப்பை மற்றும் ஜோசியம் பார்க்கும் தொழிலுக்காக குடும்பத்தினருடன் சாக்கோட்டையில் உள்ள ஒரு ஊரணி அருகே தங்கியுள்ளார். ஊருணியில் குளிப்பதற்காக சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
கார்த்தியின் மனைவி முத்துமாரி, உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில், கார்த்தி குளத்தில் மூழ்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது. முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.