/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
/
மடப்புரத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
ADDED : ஆக 01, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர்கள் சுரேஷ் (திண்டுக்கல்) ஞானசேகரன் ( மடப்புரம்) தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவியர் இந்த பணியில் ஈடுபட்டனர். 9 உண்டியல்களில் 18 லட்சத்து 10 ஆயிரத்து 469 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கண்காணிப்பு பணியில் ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.