ADDED : ஜூலை 04, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே உள்ள சீவலாதி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி ராஜாமணி 70, இவர் சாத்தனுாரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார்.
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 7 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்து சாலைக்கிராமம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.