ADDED : மே 01, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நெடோடை கிராமத்தை சேர்ந்தவர் மலைராஜ் மகன் பாண்டி 48. இவர் புலியடிதம்பத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு நேற்று காலை 8:30 மணிக்கு கடை திறப்பதற்காக வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையினுள் சென்று பார்த்த போது பெட்டி உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் பணம் 4 புதிய சட்டைகள் திருடு போனது தெரிய வந்தது. போலீசில் புகார் அளித்தார்.
பள்ளித்தம்பம் ராசப்பா மகன் ராஜ்குமார் 43. அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பூட்டை உடைத்த நபர்கள் கடையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணத்தையும் ஒரு மூடை அரிசியையும் திருடிச் சென்றுள்ளனர்.