ADDED : மே 28, 2024 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு தெப்ப உற்ஸவ விழா நடைபெற்றது.
இங்கு மே 15 அன்று கொடியேற்றத்துடன், வைகாசி பிரமோத்ஸவ விழா தொடங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். மே 20ல் திருக்கல்யாணமும், மே 23ல் தேரோட்டமும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்ஸவ விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தெப்ப மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவேங்கடமுடையான எழுந்தருளினார். தெப்பத்தை மூன்று முறை சுவாமி வலம் வந்தார். நேற்று புஷ்ப பல்லாக்கு நடந்தது.
கோயில் அறங்காவலர் சீனிவாசன், செயல் அலுவலர் விநாயக வேல் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.