ADDED : ஜூன் 23, 2024 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழாவின் 10ம் திருநாளையொட்டி தீர்த்தவாரி உற்ஸவம் நடத்தது.
காலை 10:00 மணிக்கு சுவாமி அம்மன் புறப்பாடு, ஊடல் உற்ஸவம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு பாலாற்றில் தீர்த்தம் கொடுக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு தீர்த்தமண்டகப்படியும், இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.
பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். அதிகாலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு ஆச்சார்ய உற்ஸவத்துடன் விழா நிறைவு பெற்றது.