/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் தெப்ப விழா ஆலோசனை கூட்டம் கூடுதல் சிறப்பு பஸ்கள், துப்புரவு பணியாளர்கள் தேவை
/
திருக்கோஷ்டியூர் தெப்ப விழா ஆலோசனை கூட்டம் கூடுதல் சிறப்பு பஸ்கள், துப்புரவு பணியாளர்கள் தேவை
திருக்கோஷ்டியூர் தெப்ப விழா ஆலோசனை கூட்டம் கூடுதல் சிறப்பு பஸ்கள், துப்புரவு பணியாளர்கள் தேவை
திருக்கோஷ்டியூர் தெப்ப விழா ஆலோசனை கூட்டம் கூடுதல் சிறப்பு பஸ்கள், துப்புரவு பணியாளர்கள் தேவை
ADDED : மார் 02, 2025 05:37 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவத்திற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்ஸவம் மார்ச் 14ல் நடைபெறுகிறது. மார்ச் 5ல் கொடியேற்றத்துடன் உற்ஸவம் துவங்குகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடந்தது. கூட்டத்திற்கு தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். டி.எஸ்.பி.செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.
திருக்கோஷ்டியூர் இன்ஸ் பெக்டர் செல்வராகவன், தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன் மற்றும் பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் கூறுகையில் சிறிய பஸ் பயணியர் நிழற்கூடம் போதாதது. சிகிச்சைக்கு கட்டில், மேஜை வசதி தேவை என்றனர்.
தீயணைப்புத்துறையினர் கூறுகையில் குளத்திற்கான தடுப்பு வேலி கதவின் சாவி விழா முடியும் வரை எங்களிடம் தந்தால் தான் மீட்பு பணிகளை விரைவு படுத்த முடியும் என்றனர்.
மின்துறையினர் கூறுகையில், 'கடைகளில் பொது விநியோகத்திலிருந்து மின் திருட்டு செய்வதை தடுக்க வேண்டும் என்றனர். தெப்ப மண்டபத்திற்கு சாமி செல்லவும், பக்தர்கள்செல்லும் நடைபாதையில் பெண்கள் விளக்கு ஏற்றுவதை தடுக்க வேண்டும்.
வழக்கத்தை விட கூடுதலாக மாவட்ட அளவில் துப்புரவு பணியாளர்கள் வரவழைத்து கடைசி 3 நாட்கள் பணியாற்ற வேண்டும். போலீசார், அரசு பணியாளர்களுக்கு போதிய உணவு, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
சுவாமி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கும், வாகன நிறுத்தங்களிலும் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும். மின் விநியோகம் தடையில்லாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடை பாதை, கழிப்பிட கட்டடங்களை மறைத்து போடப்படும் கடைகளை அகற்ற வேண்டும். தெப்பத்தில் பொதுப்பணித்துறையினர் அனுமதித்த அளவிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என்றனர். இந்த பிரச்னைகளில் கவனம் செலுத்த முடிவானது.