/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயல் அலுவலர் இல்லாத திருப்புவனம் பேரூராட்சி
/
செயல் அலுவலர் இல்லாத திருப்புவனம் பேரூராட்சி
ADDED : ஜூன் 14, 2024 04:50 AM
திருப்புவனம்:திருப்புவனம் பேரூராட்சியில் செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் பொறுப்பு செயல் அலுவலர் மட்டுமே இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் திருப்புவனத்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.
தினசரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துாய்மை பணிகள், தடையின்றி குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அத்யாவசிய பணிகளுக்கு தற்காலிக நிதியை வைத்து செலவு செய்வது செயல் அலுவலரின் பணியாகும், குழாய் உடைப்பு, மின்கம்பங்கள் சேதம் உள்ளிட்ட பணிகளுக்கு செயல் அலுவலர் உத்தரவு மூலம் ஒப்பந்தகாரர்கள் பணிகளை நிறைவு செய்வது வழக்கம்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன் செயல் அலுவலர் ஜெயராஜ் மாறுதலில் சென்றார். அவருக்கு பின் செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் திருப்புத்தூர் செயல் அலுவலர் தனுஷ்கோடி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.