/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அருண் காஸ் ஏஜன்சி ஆண்டு விழா
/
திருப்புவனம் அருண் காஸ் ஏஜன்சி ஆண்டு விழா
ADDED : மே 24, 2024 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவன காஸ் சிலிண்டர் விநியோகஸ்தராக அருண் காஸ் ஏஜன்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நிறுவனம் தொடங்கி 25 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு வெள்ளி விழா நடந்தது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மதுரை மண்டல மேலாளர் பிரபாகரன் தலைமையில் நடந்த விழாவில் பிளான்ட் மேலாளர் மாணிக்கவாசகம், லூப்ரிகண்ட் மற்றும் ஆயில் விற்பனை மேலாளர் கார்த்திக் டோபா, ஆய்வாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. அருண் காஸ் ஏஜன்சி உரிமையாளர் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.