/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
2 நாட்கள் இருளில் மூழ்கிய திருப்புவனம்
/
2 நாட்கள் இருளில் மூழ்கிய திருப்புவனம்
ADDED : ஆக 08, 2024 04:36 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் இருளில்மூழ்கியதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருப்புவனம் நெல்முடிக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து திருப்புவனம் நகர் முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
திருப்புவனத்தில் கடந்த 5ம் தேதி மதியம் இரண்டு மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் மாலை ஐந்தரை மணிக்கு வழங்கப்பட்டது. 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இரவு பத்து மணிக்கு தான் வழங்கப்பட்டது.
நகரில் மின் தடை ஏற்பட்டால் உடனுக்குடன் பழுதை சரி செய்ய உதவி பொறியாளர் உள்ளிட்ட யாருமே இல்லை.
திருப்புவனத்தில் ரோட்டை ஒட்டி 20க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளன. மாலை ஐந்து மணிக்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஓட்டல்களில் வியாபாரம் இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டது.
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உலகப்பன் கூறுகையில், கடந்த இரு நாட்களாக மழை பெய்து கொண்டே இருந்ததால் பழுது ஏற்பட்ட இடத்தை கண்டறிய முடியவில்லை. உதவி பொறியாளர், நான் உள்ளிட்ட எல்லோருமே பழுதை கண்டறிய ஒவ்வொரு பகுதியாக சென்று நாங்கள் பழுதை கண்டறிந்து சரி செய்தோம், என்றார்.