/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் காளியம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழா
/
திருப்புத்துார் காளியம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழா
திருப்புத்துார் காளியம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழா
திருப்புத்துார் காளியம்மன் கோயில் ஆடி வெள்ளி திருவிழா
ADDED : ஆக 17, 2024 12:43 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் ஆலமரத்து காளியம்மன் ராஜகாளியம்மன் கோயிலில் நேற்று கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். காவடி எடுத்து,அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
இக்கோயிலில் ஆடியில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் விழா எடுக்கின்றனர்.
நேற்று கடைசி வெள்ளியை முன்னிட்டு காலை 8:45 மணிக்கு செட்டியதெரு ராமர் மடத்திலிருந்து 1000க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயில் வந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் வேல், திரிசூலம் அலகு குத்தி, சர்ப்ப, மயில்,பறவைக்காவடிகள் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் கோயில் முன் பூக்குழி இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை நடந்தது. அன்னதான பூஜை நடந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.