/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வாரச்சந்தையில் தக்காளி பீன்ஸ், கேரட் விலை உயர்வு
/
சிவகங்கை வாரச்சந்தையில் தக்காளி பீன்ஸ், கேரட் விலை உயர்வு
சிவகங்கை வாரச்சந்தையில் தக்காளி பீன்ஸ், கேரட் விலை உயர்வு
சிவகங்கை வாரச்சந்தையில் தக்காளி பீன்ஸ், கேரட் விலை உயர்வு
ADDED : ஜூலை 18, 2024 06:36 AM

சிவகங்கை : சிவகங்கையில் நேற்றைய வாரச்சந்தையில் தக்காளி, சோயா, பட்டர் பீன்ஸ், கேரட் விலை அதிகரித்திருந்ததால், குடும்ப தலைவிகள் சமையலுக்கு காய்கறிகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். சிவகங்கை, வாரச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடி துவக்கத்தில் வரத்து குறைவால் முக்கியமான காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக சாம்பார், சட்னி, ரசம் என அனைத்து உணவும் தயாரிக்க பயன்படும் தக்காளி கிலோ ரூ.60ல் இருந்து 80 ஆக அதிகரித்து விட்டது. அதே போன்று சோயா பீன்ஸ் கிலோ ரூ.260 ஆகவும், பட்டர் பீன்ஸ் கிலோ ரூ.280 க்கும், ரூ.70 க்கு விற்ற ஒரு கிலோ கேரட் நேற்று சந்தையில் ரூ.100க்கு விற்கப்பட்டது.
குடும்ப தலைவிகள் சமையலுக்கு எந்தவித காய்கறிகளை தேர்வு செய்து வாங்குவது என தெரியாமல் திகைத்து நின்றனர். ஏற்கனவே வாரச்சந்தை கடைக்காரர்களிடம் நகராட்சி நிர்ணயித்த அளவை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால், அந்த சுமையை வியாபாரிகள், மக்கள் வாங்கும் காய்கறிகள் மீது திணித்து விடுகின்றனர்.
இதன் காரணமாக சிவகங்கை வாரச்சந்தைக்குள் கடை விரிக்கவே வியாபாரிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.