ADDED : ஏப் 28, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : மும்பையில் அகில இந்திய மூத்தோர் தடகள சங்கம் சார்பில் 43வது தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடக்கிறது.
இதில் தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., யாக பணியாற்றி வரும் திருப்புவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 54, 5000 மீட்டர் நடைப்போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.
35 வயது முதல் 90 வயது வரையிலான மூத்தோர்களுக்கு நடக்கும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், ஷாட்பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆயிரத்து 500 பேர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.

