/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி-திருமங்கலத்திற்கு டவுன் பஸ்
/
கீழடி-திருமங்கலத்திற்கு டவுன் பஸ்
ADDED : பிப் 25, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடியில் இருந்து மதுரை திருமங்கலத்திற்கு நேற்று முதல் நேரடி டவுன் பஸ் வசதியை எம்.எல்.ஏ., தமிழரசி தொடங்கி வைத்தார்.
கீழடியில் இருந்து காலை 8:00, மதியம் 3:15 மணிக்கு புறப்படும் டவுன் பஸ் கொந்தகை, பொட்டப்பாளையம், காஞ்சிரங்குளம், சோளங்குருணி,வலையங்குளம், ஆலங்குளம் வழியாக மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு செல்லும்.
நேற்று காலை கீழடியில் இதற்கான தொடக்கவிழாவில் எம்.எல்.ஏ., தமிழரசிகொடியசைத்து டவுன் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். விழாவில் திருமங்கலம் கிளை மேலாளர் முத்துமணி, வணிக பிரிவு மேலாளர் சதீஷ்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

