/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுச்சாவடி அலுவலர் பயிற்சி வகுப்பு
/
ஓட்டுச்சாவடி அலுவலர் பயிற்சி வகுப்பு
ADDED : மார் 25, 2024 06:56 AM
சிவகங்கை, : சிவகங்கை தொகுதி யில் சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்புத்துார், காரைக்குடி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 1,357 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு முதல், இரண்டாம், மூன்றாம் நிலை அலுவலர்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துாரில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஜயகுமார், பால்துரை, சரவண பெருமாள், ஜெயமணி பங்கேற்றனர்.
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்களை வைத்து பயிற்சி அளித்தனர்.
மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி, காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் அரசு நகராட்சி பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. தாசில்தார்கள் சிவகங்கை சிவராமன், காரைக்குடி தங்கமணி, மானாமதுரை ராஜா, திருப்புத்துார் மாணிக்கவாசகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

