sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயில் இன்ஜின் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு

/

ரயில் இன்ஜின் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு

ரயில் இன்ஜின் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு

ரயில் இன்ஜின் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 21, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே ரயில் பாதையை செப்பனிடும் பேக்கிங் ரயில் இன்ஜின் தடம் புரண்டதால் நேற்று காலை மதுரை - மண்டபம் இடையே ரயில்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை - மண்டபம் இடையே அகல ரயில் பாதையில் உள்ள ஜல்லிகற்களை வெளியே எடுத்து மணல் குவியலை அகற்றும் பேக்கிங் மிஷின் ஒரு வாரமாக திருப்பாச்சேத்தி -- திருப்புவனம் இடையே பணிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிகாலை 5:15 மணிக்கு பேக்கிங் மிஷின் இன்ஜின் திருப்பாச்சேத்தி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து திருப்புவனம் புறப்பட்டது.

திருப்பாச்சேத்தியில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் சென்ற போது இன்ஜினின் சக்கரங்கள் தடம்புரண்டு நின்றது.

இதனால் மதுரையில் இருந்து காலை 6:20 மணிக்கு புறப்பட வேண்டிய மண்டபம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது. மண்டபத்தில் இருந்து காலை 6:20க்கு புறப்பட்ட ரயில் மானாமதுரையுடன் நிறுத்தப்பட்டது.

ரயில் பாதையில் சிக்கிய இன்ஜினை அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள் இணைந்து ஜாக்கி, லீவர் மூலம் போராடி மீண்டும் ரயில் பாதைக்கு இன்ஜினை மதியம் 12:00 மணிக்கு கொண்டு வந்தனர்.

பின் பேக்கிங் மிஷின் இன்ஜின் திருப்புவனம் ஸ்டேஷனுக்கு சென்றது.

மதியமே மீட்பு பணிகள் நிறைவடைந்ததால் மதியம் 1:20 மணிக்கு மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக மண்டபத்துக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us