/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உழவர் உற்பத்தியாளருக்கு பயிற்சி முகாம்
/
உழவர் உற்பத்தியாளருக்கு பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 08, 2024 05:31 AM

சிவகங்கை : சிவகங்கையில் வேளாண்மை விற்பனை, வணிகம் சார்பில் உழவர் உற்பத்தியாளர்களுக்கான பணிமனை பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேளாண் வணிக துணை இயக்குனர் தமிழ்செல்வி வரவேற்றார். மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், கலெக்டர் பி.ஏ.,(வேளாண்மை) சுந்தரமகாலிங்கம், பெங்களூரூ இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் சங்கர், செந்தில்குமார் பேசினர்.
பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது:
இன்றைக்கு படித்தவர்களும் விவசாயத்தை தேடி வருகின்றனர். இதற்கான மார்க்கெட்டிங், மதிப்புகூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயத்தை நாடி அனைவரும் வருகின்றனர். இன்றைக்கு மண், தண்ணீரின் தன்மை மாறி வருகிறது.
அதே போன்று நிலத்தடி நீர்மட்டமும் குறைவது இயற்கையின் மாற்றத்தால்மட்டுமே. எனவே இயற்கையை வளர்க்க கண்டிப்பாக விவசாயத்தை படித்த இளைஞர்களும் செய்து, உணவு உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விதத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என்றார்.
இப்பணியிடை பயிற்சி முகாமில் இளையான்குடி, சிங்கம்புணரி ஒன்றியங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். வேளாண்மை அலுவலர்கள் கனிமொழி, மரகதம், புவனேஸ்வரி கருத்தரங்கு ஏற்பாட்டை செய்திருந்தனர். முன்னதாக உழவர் உற்பத்தியாளர் விற்பனை செய்த உணவு பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார்.