ADDED : மே 01, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : கல்லல் வட்டார வேளாண் துறை சார்பில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய குழுக்களுக்கு பயிற்சி நடந்தது. வேளாண் துணை இயக்குனர் சண்முக ஜெயந்தி தலைமையேற்றார். உதவி இயக்குனர் அழகுராஜா பண்ணைகளின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார்.சேது பாஸ்கரா கல்லுாரி உதவி பேராசிரியர் மதியழகன் இயற்கை பண்ணையத்தில் ஜீவாமிர்தம்,பஞ்சகாவியம்,மூலிகை பூச்சி விரட்டி,தேனீ வளர்ப்பு குறித்து விளக்கினார்.
வேளாண் அலுவலர் பாலகணபதி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் சேகர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் உதவி தொழில் நுட்ப மேலாளர் தமிழரசி பேசினர்.
உதவி வேளாண் அலுவலர் காளீஸ்வரன் வசந்த் கனகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.