ADDED : மே 05, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம், : கல்லல் ஒன்றியம் கம்பனுாரில் வாடிக்கருப்பர், அந்தரநாச்சியப்பன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழுவிலிருந்து 70க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன.
தொடர்ந்து வயல்களில் கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடிக்க முயன்றதில் சிலருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டன. அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதால் ஏற்பாட்டாளர்கள் மீது நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.