ADDED : மே 07, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம்: கல்லல் ஒன்றியம் கீழையப் பட்டி விநாயகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு காளைகள் தொழுவிலிருந்து அவிழ்க்கப்பட்டன. மாடுகளை பிடித்தவர்களுக்கும், பிடிபடாத மாடு உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாடு பிடிக்க முயன்றதில் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர்.
காலை 10:00 மணிக்கு துவங்கிய மஞ்சுவிரட்டு இரண்டு மணி நேரம் நடந்தது. முன்னதாக தொழுவிற்கு வெளியிலும் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்க்கப்பட்டன.
அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.