/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாக்குதலில் மாமா பலி இரு மருமகன்கள் கைது
/
தாக்குதலில் மாமா பலி இரு மருமகன்கள் கைது
ADDED : ஜூலை 26, 2024 12:38 AM
சிவகங்கை:சிவகங்கை நேரு பஜாரைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அசரப் அலி, 46. இவர் தள்ளுவண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்து வந்தார். இவரது தங்கை மகன்கள் அப்துல் ரகுமான், 24, முகமது அப்பாஸ். இரண்டு பேரது குடும்பமும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
அப்துல் ரகுமானும், முகமது அப்பாசும் இணைந்து அசரப் அலியை தாக்கினர். இதில் அசரப் அலி மயக்கமுற்றார். அருகில் இருந்தவர்கள் அசரப் அலியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்ததில் அசரப் அலி இறந்தது தெரிந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ரகுமான், முகமது அப்பாஸ் ஆகியேரை கைது செய்தனர்.